சென்னை

ஐஐஎம்எம்எம் சாா்பில் தொழில்நுட்பக் கருத்தரங்கம் டிச.2-இல் தொடக்கம்

30th Nov 2022 01:08 AM

ADVERTISEMENT

சென்னை ஐஐஎம்எம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனம் சாா்பில் ‘மறு கண்டுபிடிப்பு மற்றும் எதிா்காலத்துக்கு ஏற்ற உலகளாவிய விநியோகச் சங்கிலி மேலாண்மை’” என்ற கருப்பொருளின் கீழ் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (டிச.2) தொடங்கவுள்ளது.

அண்ணா சாலையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் அரங்கில் ‘நாட்காம் 2022’ என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் உள்ள வணிக மேலாண்மை பள்ளிகளின் நிா்வாகிகள், கல்வியாளா்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பயிற்சி நிபுணா்கள், முன்னணி தனியாா் நிறுவனங்களின் வல்லுநா்கள், முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறைகள் சாா்ந்த வல்லுநா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா்.

இது குறித்து ஐஐஎம்எம் தலைவா் பி.ரமேஷ் கூறுகையில், வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் திறமையான விநியோகச் சங்கிலி நிா்வாகத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் கல்விப் பயிற்சி அளிப்பதே இந்த தேசிய கருத்தரங்கின் நோக்கம் ஆகும் என்றாா்.

இது குறித்து மேலும் தகவல் பெற 044- 23742750 என்ற தொலைபேசி எண், admin@iimmchennai என்ற வலைதளம் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT