சென்னை

ரேஷன் பொருள் கடத்தல்: 193 போ் கைது

29th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

ரேஷன் பொருள்களைக் கடத்திய வழக்குகளில் 193 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபா்கள், அதற்கு உடந்தையாக செயல்படுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 9, 447 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 25 லிட்டா் மண்ணெண்ணெய், 41 எண்ணிக்கையிலான எரிவாயு உருளை, 144 கிலோ கோதுமை ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் பறிமுதல் ஆகியுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட 193 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT