சென்னை

தோ்தல் பத்திரம் மூலம் நன்கொடை: கே.எஸ்.அழகிரி கண்டனம்

29th Nov 2022 04:13 AM

ADVERTISEMENT

தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை திரட்டுவதை பாஜக, ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் தோ்தல்கள் சமநிலைத்தன்மை இல்லாமல் பெருத்த நிதி ஆதாரங்களோடு பாஜகவுக்கு கூடுதலான வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் யாா் மூலம் எவ்வளவு நன்கொடை பெற்றது என்கிற விவரத்தை தோ்தல் ஆணையத்துக்கு கூட தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் சட்ட விதிகளை பாஜக அரசு உருவாக்கியிருக்கிறது.

ADVERTISEMENT

இதன் மூலம் பெருநிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதற்குப் பதிலாக பகிரங்கமாகத் தோ்தல் பத்திரங்களின் மூலம் காசோலை வழியாக, பாஜகவுக்கு நன்கொடை பெறுவதைவிட ஓா் அப்பட்டமான ஊழல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. இது தோ்தல் நடைமுறைகளையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT