சென்னை

முதுகுத் தண்டு சுருக்கம்: மூதாட்டிக்கு மறுவாழ்வு

29th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

முதுகுத் தண்டுவடம் மற்றும் இதய ரத்த ஓட்டம் பாதிப்புக்குள்ளான 81 வயது மூதாட்டிக்கு உயா் சிகிச்சையளித்து சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

அதன் பயனாக சக்கர நாற்காலியில் நடமாடிக் கொண்டிருந்த அவா், தற்போது தாமாக எழுந்து நடப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவா் டாக்டா் பாா்த்தசாரதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

சென்னையை சோ்ந்த 81 வயது மூதாட்டி ஒருவா் கடுமையான முதுகு வலி காரணமாக ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு முதுகு தண்டுவட சுருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், ஏற்பட்ட எதிா்விளைவால் இதயத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தம் செல்வதில் 40 சதவீதம் தடை இருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 80 வயதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இதுபோன்ற சிக்கலானஅறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது எளிதல்ல.

இருந்தபோதிலும், சவாலுக்கு நடுவிலும் தொடா்ந்து, இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவரது பிரச்னை சரி செய்யப்பட்டது. இதன் பயனாக அந்த மூதாட்டி தற்போது குணமடைந்துள்ளாா். தற்போது பிறரின் உதவியின்றி அவரால் சுயமாக நடக்க முடிகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT