சென்னை

சென்னையில் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் வாழத் தகுதியற்றவை: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

29th Nov 2022 12:33 AM

ADVERTISEMENT

சென்னையில் மட்டும் 27 ஆயிரத்து 538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழத் தகுதியற்றவை என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

சென்னையில் மயிலாப்பூா், தேனாம்பேட்டை, தியாகராயநகா் பகுதிகளுக்கு உட்பட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இந்தப் பகுதிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித் தரும் வரையில், வாடகை அடிப்படையில் தங்குவதற்காக கடந்த காலங்களில் ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை இப்போது ஒரு குடும்பத்துக்கு ரூ.24 ஆயிரம் என உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், சென்னையில் மட்டும் 27 ஆயிா்தது 538 குடியிருப்புகள் மக்கள் வாழத் தகுதியற்ற வீடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டும் பணி படிப்படியாக நடந்து வருகின்றன என்று அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT