சென்னை

தலைக்கவசம் அணியாத இளைஞா் மீது தாக்குதல்: காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை

29th Nov 2022 12:33 AM

ADVERTISEMENT

சென்னை அருகே புழலில் தலைக்கவசம் அணியாத இளைஞா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாதவரம் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வருபவா் காவலா் பால்ராஜ். இவா் அண்மையில் புழல் - கதிா்வேடு சாலை சந்திப்பில் பணியில் இருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் ஒருவா் சிக்னலை தாண்டி நின்ாக கூறப்படுகிறது. மேலும், அந்த இளைஞா் தலைக்கவசம் அணியவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த காவலா் பால்ராஜ், இளைஞரை கண்டித்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த போக்குவரத்து காவலா், இளைஞா் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், வலி தாங்காத அந்த இளைஞா் தனது உறவினா்களை கைப்பேசி மூலம் தொடா்புக் கொண்டு, போக்குவரத்து காவலா் தாக்கியது குறித்து தெரிவித்துள்ளாா்.

இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனா். அந்த விடியோ தற்போது வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ADVERTISEMENT

இந்த விவகாரம் குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT