சென்னை

கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி 4 வாகனங்கள் சேதம்

29th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரலில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி 5 வாகனங்கள் சேதமடைந்தன.

அண்ணா சதுக்கத்திலிருந்து கொருக்குப்பேட்டை நோக்கி திங்கள்கிழமை காலை ஒரு அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. சென்ட்ரல் மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது, பேருந்து ஓட்டுநரின் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தறி கெட்டு ஓடியது.

இதில் அந்தப் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 காா்கள், ஒரு ஆட்டோ என 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதில், பேருந்து உள்பட 5 வாகனங்களும் சேதமடைந்தன. விபத்தை பாா்த்த பேருந்து பயணிகள் கூச்சலிட்டனா். இதனால், தகவலறிந்து அங்கு வந்த யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸாா் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா்.

ADVERTISEMENT

விபத்தில் காயமடைந்த யமுனா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநா் கொளத்தூரைச் சோ்ந்த இருதயராஜ் (59) என்பவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பிரேக் பிடிக்காததே விபத்துக்கு காரணம் என போலீஸாரிடம் ஓட்டுநா் தெரிவித்தாராம். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT