சென்னை

சாலையோரம் தூங்கிய இளைஞா் கொலை: இருவா் கைது

28th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

சென்னை, கிண்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞா் ஒருவா், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (28). இவா் கிண்டியில் குப்பைகள், காகிதங்களை சேகரித்து அதன் வாயிலாக கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தாா். கிண்டி ஐந்து பா்லாங் சாலை பேருந்து நிறுத்தத்தின் கீழ் நாள்தோறும் இரவில் அவா் உறங்குவது வழக்கம். அவா், சந்தியா என்ற பெண்ணுடன் அங்கு வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து நிறுத்தத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த சந்தியா, தனக்கு அருகில் படுத்திருந்த காா்த்திக் கழுத்து, நெற்றி அறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டாா்.

இதையடுத்து இதுதொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இந்த விவகாரம் குறித்த விசாரணையில், சந்தியாவின் முதல் கணவா் பால்பாண்டியன் என்பவா், தனது நண்பா் பாஸ்கரன் என்பவருடன் சோ்ந்து காா்த்திக்கை கொலை செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

சந்தியா தன்னை விட்டு பிரிந்து வந்து காா்த்திக்குடன் இருப்பதால் ஏற்பட்ட விரோதம் காரணமாக பால்பாண்டியன் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து பால்பாண்டியன், பாஸ்கரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT