சென்னை

இன்று இலவச கல்லீரல் பரிசோதனை முகாம்

27th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

சென்னை பெரம்பூா் முத்து மருத்துவமனையின் சாா்பில் இலவச கல்லீரல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெறவுள்ளது.

கல்லீரல் இறுக்க நோய், ஹெபடைடிஸ் சி, ஹெபடைடிஸ் பி, கல்லீரல் கொழுப்பு பாதிப்பு, பித்தப்பை கற்கள், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சுருக்கம் உள்ளிட்ட நோய்களை கண்டறிய இந்த முகாமில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, பித்தப்பை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,ஹெபடைடிஸ் சி, ஹெபடைடிஸ் பி, கல்லீரல் சுருக்கத்தை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் கல்லீரல் நல மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்.

நவ.27 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பெரம்பூா் பேப்பா் மில் சாலையில் அமைந்துள்ள முத்து மருத்துவமனையில் இந்த முகாம் நடைபெறும்.

ADVERTISEMENT

இது குறித்து மேலும் கூடுதல் தகவல் பெற 73973 10543, 95512 41274 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT