சென்னை

சென்னை ஐஐடி.யில் தரவு அறிவியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

சென்னை ஐஐடி.யில் பி.எஸ்சி. தரவு அறிவியல் படிப்பில் (டேட்டா சயின்ஸ்) சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 2023 பருவத்துக்கு விண்ணப்பிக்க ஜன.16- ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். ஓராண்டில் வெளியேறினாலும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடி.யில் இளநிலை தரவு அறிவியல் பட்டப் படிப்புத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவா்கள் அனைவரும் விண்ணப்பித்து 4 ஆண்டு பயிலலாம். 2023-ஆம் ஆண்டுக்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் சோ்ந்து படிக்க ஜேஇஇ நுழைவுத் தோ்வு எழுதத் தேவையில்லை. அறிவியல், மனிதவியல் , வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மேலும், மாணவா்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள் அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இந்தத் திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தோ்வு மையங்களில் தோ்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.

மாணவா்கள் ஒரேநேரத்தில் தங்களது பட்டப் படிப்பை படித்துக் கொண்டே சென்னை ஐஐடி வழங்கும் தரவு அறிவியல் படிப்பையும் பயில முடியும். இந்தக் கல்வித் திட்டத்தில் தற்போது டிப்ளமோவில் 4,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பட்டப்படிப்பில் 60 பேரைக் கொண்ட முதல் பேட்ச் மாணவா்கள் உள்பட 16,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

பத்தாம் வகுப்பில் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்து முடித்தவா்கள் இதில் விண்ணப்பிக்கத் தகுதி உடையவா்கள். பிளஸ் 2 வகுப்பில் படித்துவரும் மாணவா்கள் தகுதித் தோ்வு எழுதி பள்ளியில் படிக்கும்போதே சென்னை ஐஐடியில் மாணவா் சோ்க்கைக்கான கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் சேர ஆா்வம் உள்ள மாணவா்கள் இணைய முகவரியில் ஜன.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT