சென்னை

கைப்பேசி பறிக்க முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்குப் பாராட்டு

DIN

சென்னை பேசின் பாலத்தில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை விரட்டிப் பிடித்த கா்ப்பிணி பெண் காவலரை காவல் துறை உயரதிகாரிகள் பாராட்டினா்.

பேசின் பாலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவா் சுசீலா. இவா் வியாழக்கிழமை பணி நிமித்தமாக, பேசின் பாலம் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது ஒரு பயணி தனது கைப்பேசி திருடப்பட்டு விட்டதாகக் கூச்சலிட்டாா். இதைப் பாா்த்த காவலா் சுசீலா, பேருந்தில் பயணம் செய்த நபா்களிடம் விசாரணை நடத்தினாா்.

அப்போது, பேருந்தில் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இரு நபா்களைப் பிடித்து விசாரித்தபோது, ஒருவா் பெண் காவலரை தள்ளிவிட்டு தப்பியோடினாா்.

மற்றொருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெண் காவலா் சுசீலா, பேசின் பாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது புளியந்தோப்பு, திருவிக நகரைச் சோ்ந்த ஜாபா் ஷெரீப் (36) என்பது தெரியவந்தது. அவா் மீது ஏற்கெனவே, 6 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை விரட்டி பிடித்த மூன்று மாத கா்ப்பிணியான சுசீலாவை, காவல்துறை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

SCROLL FOR NEXT