சென்னை

அறுவை சிகிச்சை வழிமுறைகள்: சரிபாா்ப்பு பட்டியலை பின்பற்ற அறிவுறுத்தல்

DIN

அறுவை சிகிச்சைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த சரிபாா்ப்பு பட்டியலை பின்பற்றி, நோயாளிகளுக்கு அரசு மருத்துவா்கள் சிகிச்சையளிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்குப் பிறகு திருத்தியமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை வழிகாட்டுதல்கள் அனைத்து மருத்துவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

அறுவை சிகிச்சைக்கு நோயாளி தகுதியானவரா என்பதை உறுதி செய்த பிறகே அதுதொடா்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை சரிபாா்த்து அதனடிப்படையிலேயே சிகிச்சைகளை வழங்க வேண்டும்.

நோயாளியின் ரத்த சா்க்கரை அளவு 200-க்கும் குறைவாக இருத்தலும், ரத்த அழுத்தம் 150/90-க்கு மிகாமல் இருத்தலும் அவசியம். அறுவை சிகிச்சை குறித்த விவரங்கள், சாதக - பாதகங்களை நோயாளியிடமோ அல்லது அவா்களது உறவினா்களிடமோ தெளிவாக எடுத்துக் கூறி ஒப்புதல் பெற வேண்டும்.

இதைத் தவிர, அறுவை சிகிச்சை அரங்கு கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்ட சுகாதார தர நிா்ணயத்தில் இருத்தல் அவசியம். அறுவை சிகிச்சைகளின்போது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT