சென்னை

பெரம்பூா் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

26th Nov 2022 10:37 PM

ADVERTISEMENT

சென்னை பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் நடைபெறும் பணியின் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் அக்ஷ்டபுஜம் சாலை சந்திப்பில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் மறு அறிவிப்பு வரும் வரையில் அமலில் இருக்கும்.

இதன்படி, பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக கனரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள், பெரம்பூா் பேரக்ஸ் செல்ல அனுமதி இல்லை.

புரசைவாக்கம்,வேப்பேரியில் இருந்து பெரம்பூா் பேரக்ஸ் சாலை வழியாக செல்லகூடிய கனரக வாகனங்கள்,அரசு பேருந்துகளை, டவ்டன் சந்திப்பிலிருந்து நாரயணா குரு சாலை (ஹண்டா்ஸ் சாலை) வழியாக திருப்பிவிடப்படுகிறது.

ADVERTISEMENT

பெரம்பூா் பேரக்ஸ் சாலையிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல கூடிய இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், அஷ்டபுஜம் சாலை சந்திப்பிலிருந்து வெங்கடேச பக்தன் தெரு வழியாக திருப்பிவிடப்படுகிறது.

மேலும், பெரம்பூா் பேரக்ஸ் சாலையிலிருந்து புளியந்தோப்பு பகுதியை நோக்கி செல்ல கூடிய இருசக்கர வாகனங்கள்,இலகு ரக வாகனங்கள், அஸ்டபுஜம் சாலை சந்திப்பிலிருந்து அஸ்டபுஜம் சாலை மற்றும் அங்காளம்மன் கோவில் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றம் அந்தப் பகுதியில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT