சென்னை

சாலையோர வியாபாரிகள் 2-ஆவது கட்டகணக்கெடுப்புப் பணி தொடக்கம்

24th Nov 2022 01:19 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கை குறித்து 2-ஆம் கட்ட கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்புப் பணி முதல்கட்டமாக ஜூலை 1 முதல் மண்டலம் வாரியாக நடைபெற்றது. இதுவரை 35,000 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்துள்ளனா். 2-ஆம் கட்ட பணி புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்தப் பணி நவ. 29-ஆம் தேதி வரை திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை மண்டல அலுவலகங்களிலும், நவ.30 முதல் டிச.6-ஆம் தேதி வரை அம்பத்தூா், வளசரவாக்கம், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து டிச.7 முதல் டிச.13-ஆம் தேதி வரை ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா் மண்டல அலுவலகங்களிலும், டிச.14 முதல் டிச.21-ஆம் தேதி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும்.

விடுபட்ட சாலையோர வியாபாரிகள் தங்களின் சுயவிவரங்கள், விற்பனைப் பற்றிய தகவல்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு மூலம் இலவசமாக பதிவு செய்து அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறலாம்.

ADVERTISEMENT

பதிவு செய்பவா்களுக்கு அடையாள அட்டை, விற்பனை சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT