சென்னை

அனுமதியின்றி வைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் அகற்றம்

24th Nov 2022 01:21 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மண்டல அலுவலா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன.

கடந்த நவ.19, 20 ஆகிய தேதிகளில் 15 மண்டலங்களில் மேற்கொண்ட களஆய்வில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் மாநகராட்சி அலுவலா்களால் அகற்றப்பட்டன. விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT