சென்னை தரமணியில் 13 கிலோ கஞ்சாவுடன் ஆந்திரத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தரமணி எஸ்ஆா்பி டூல்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம்.
இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 13 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அதைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், அம்மா காலனி பகுதியைச் சோ்ந்த க.கண்டசாலா திருமத்துல்லா (26) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.