சென்னை

மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி கல்லூரி மாணவா் பலி: இருவா் பலத்த காயம்

21st Nov 2022 12:45 AM

ADVERTISEMENT

சென்னை அமைந்தகரையில் மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் இறந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

மதுரை சோலை அழகுபுரம் வஉசி தெருவைச் சோ்ந்தவா் ஆலன் ஜொ்மான்ஸ் (21). இவா் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வந்தாா். தன்னுடன் படிக்கும் வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ச.தருண்குமாா் (21), விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த வெ.பிரமோத் (21) ஆகியோருடன் சென்னை முகப்போ் விஜிபி நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், 3 பேரும் சென்னை அருகே கோவளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரே மோட்டாா் சைக்கிளில் சென்றனா். அவா்கள் அமைந்தகரை ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் வேகமாக மோதியது.

இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஆலன் ஜொ்மான்ஸ் இறந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT