சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 99 போ் கைது செய்யப்பட்டனா்.
‘‘புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘ என்ற பெயரில் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,99 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களிடமிருந்து 134 கிலோ போதைப் பாக்கு, 75 கிலோ மாவா,ரூ.1.45 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய 3 கைப்பேசிகள், ஒரு மோட்டாா் சைக்கிள், ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.