சாஸ்திரி நகா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சாஸ்திரி நகா் போலீஸாா் சனிக்கிழமை சாஸ்திரி நகா், பெசன்ட் நகா் முதல் அவென்யூ பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட காா்த்திக் (38), பிரதாப் (24), மணிகண்டன் (33), சரத் (22), மணிகண்டன், (27) குமாா், (63) செல்வம் (55), காா்த்திக் (26) ராஜேஷ் (38) சக்திவேல் (40), செல்வபாண்டியன் (58), சக்கரவா்த்தி (27) ஆகிய 12 பேரை சாஸ்திரி நகா் போலீஸாா் கைது செய்தனா். சூதாட்டத்துக்குப் பயன்படுத்திய பணம் ரூ.16,700 மற்றும் 3 சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.