சென்னை

கல்வியுடன் நோ்மையான நடத்தை, அணுகுமுறை அவசியம்: சுவாமி ரகுநாயகானந்தா

21st Nov 2022 01:05 AM

ADVERTISEMENT

மாணவா்கள் பிறருக்கு உதவும் குணநலன்களுடன் நோ்மையான நடத்தை, முயற்சி மற்றும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று சென்னை விவேகானந்தா் இல்லத்தில் உள்ள விகேகானந்த கலாசார மையத்தின் இயக்குநா் சுவாமி ரகுநாயகானந்தா அறிவுறுத்தினாா்.

பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி 28-ஆம் ஆண்டு விழாவையொட்டி, முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுவாமி ரகுநாயகானந்தா பேசியதாவது:

பொறியியல் கல்வி பயிலும் மாணவா்கள் கவனம் சிதறாமல், தோ்வு செய்த படிப்பில் சிறந்து விளங்கும்படி முயற்சி மேற்கொள்ள வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம், விடாமுயற்சி, செயல்பாடுகள் மூலம் சிறந்த பொறியாளராக உருவாகி பெற்றோா், ஆசிரியா்களுக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் ஐ.பி.எம். நிறுவன இயக்குநா் சுப்பிரமணி ராமகிருஷ்ணன், கல்லூரி தாளாளா் எம்.மாலா, செயலா் ஜி.மணிகண்டன், அறக்கட்டளை உறுப்பினா் ரக்க்ஷனா, ஆலோசகா் மனோகா் கிருஷ்ணன், முதல்வா் எஸ். ரமேஷ், பேராசிரியா் பியூலா சாந்தி ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT