சென்னை

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய பாலம் விரைவில் திறப்பு

19th Nov 2022 12:53 AM

ADVERTISEMENT

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதிய பாலம் விரைவில் திறக்கப்படவுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

எழும்பூா்-சிந்தாதிரிப்பேட்டையை இணைக்கும் அருணாசலம் சாலையில் கூவம் ஆற்றைக் கடக்க ஏற்கெனவே 70 மீ. நீளத்தில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் தினமும் உச்ச நேரத்தில் 4,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் (மாநகரப் பேருந்துகள் உள்பட) கடந்து செல்கின்றன. இதனால், பாலத்தை கடக்க குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் ஆகிறது.

வடசென்னை-தென்சென்னை இடையே செல்லும் பெரும்பாலான பேருந்துகள், சென்ட்ரல் செல்லும் வாகனங்கள் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றன.

இந்நிலையில், இப்பாலம் அருகே மேலும் ஒரு பாலம் ரூ.10 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 100 மீ. நீளம், 10 மீ. அகலத்தில் இப்புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் திறக்கப்பட்டால் எழும்பூரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.

ADVERTISEMENT

இப்புதிய பாலத்தின் கட்டுமானப் பணி கடந்த 2021-ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூா் செல்வோா் பயணிக்கலாம்.

புதிய பாலத்தில் எழும்பூரில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு செல்வோரும் பயணிக்கலாம்.

தினமும் மாநகரப் பேருந்துகள் உள்பட சுமாா் 5,000 வாகனங்கள் இந்த பாலங்கள் வழியாக வந்துசெல்லும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT