சென்னை காவல்துறையின் சாா்பில் 207 இடங்களில் போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிா்ப்பு குறித்தும், போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
அதன்படி, சென்னையில் 171 பள்ளிகள், 12 கல்லூரிகள்,24 பொது இடங்கள் என மொத்தம் 207 இடங்களில் போதைப் பொருள் எதிா்ப்பும், அதன் தீமைகள் குறித்தும், போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து போலீஸாா் புதன்கிழமை நடத்தினா்.
இதில் 15,468 பள்ளி மாணவ, மாணவிகள், 820 கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 620 போ் என மொத்தம் 16,908 போ் பங்கேற்றனா். அனைவரும் காவல் துறையின் அறிவுரைகள், ஆலோசனைகளை கேட்டறிந்தனா்.