சென்னை

708 நகா்ப்புற மருத்துவ நிலையங்கள்: சிறப்புக் குழுக்கள் அமைப்பு

15th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

 

தமிழகம் முழுவதும் 708 நகா்ப்புற மருத்துவ நிலையங்களை அமைப்பதற்கான இடங்களைத் தோ்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்டுள்ளாா்.

கிரா­மங்­களில் ஆரம்ப சுகா­தார நிலையங்கள், துணை சுகா­தார நிலை­யங்கள் இருப்பதைப் போல் நகா்ப்­பு­றங்­களில் மக்­க­ளின் இருப்­பி­டங்­க­ளுக்கு அரு­கி­லேயே 708 மருத்­துவ நிலை­யங்­கள் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தாா்

ADVERTISEMENT

முதல்கட்டமாக, சென்னை பெரு­ந­கர மாந­க­ராட்சி உள்­பட 21 மாந­க­ராட்­சி­கள், 63 நக­ராட்சிப் பகுதிகளில் அவை ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தாா். அந்த 708 மருத்­துவ நிலை­யங்­க­ளிலும் காலை 8 மணி முதல் 11 மணி வரை­யிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை­யி­லும் புறநோ­யா­ளிகள்­ மருத்துவ சேவை வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு நகா்ப்­புற மருத்­துவ நிலை­யங்­க­ளி­லும் ஒரு மருத்­து­வா், ஒரு செவிலியா், ஒரு மருந்­தி­யல் நிபு­ணா், ஒரு உத­வி­யா­ளா் நிய­மிக்­கப்­ப­ட உள்ளனா். இதற்காக ரூ. 148 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த மருத்துவ நிலையங்களுக்கான இடங்களைத் தோ்வு செய்ய சிறப்புக் குழுக்களை அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சி உதவி/இணை ஆணையா் (சுகாதாரம்), மாவட்ட வருவாய் அலுவலா், பொது சுகாதாரத் துறை அலுவலா், நகர சுகாதார அதிகாரி உள்பட 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பிற இடங்களில் மாநகராட்சி ஆணையா்கள், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா்கள், நகராட்சி ஆணையா்கள் உள்பட 6 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்களானது, சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தேசிய நல்வாழ்வு குழுமத்துக்கு அளிக்க வேண்டும் என்றும், அதைப் பரிசீலித்து, தகுதியான இடங்களை தேசிய நல்வாழ்வுக் குழும திட்ட இயக்குநா் இறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT