சென்னை

ராமஜெயம் கொலை வழக்கில்விசாரணை குறித்த அறிக்கை தேவை:உயா்நீதிமன்றம் உத்தரவு

15th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

 

தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை ஏற்க மறுத்த சென்னை உயா் நீதிமன்றம், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சா் நேருவின் சகோதரா் ராமஜெயம், கடந்த 29.3.2012-இல் நடைபயிற்சியின்போது மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், மாநில போலீஸாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரா் ரவிச்சந்திரன் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி-யாக இருந்த ஜெயக்குமாா் தலைமையில், அரியலூா் டி.எஸ்.பி மதன், சென்னை சிபிஐ பிரிவைச் சோ்ந்த ரவி ஆகியோா் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

அக்குழுவினா் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனா். இந்த வழக்கு நீதிபதி நிா்மல்குமாா் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT