சென்னை

பத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சி:பதிவு செய்ய நவம்பா் 25 கடைசி

15th Nov 2022 12:31 AM

ADVERTISEMENT

 

பத்தாம் வகுப்பு தோ்வு எழுத உள்ள அனைத்து தனித் தோ்வா்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு நவ.25-ஆம் தேதிக்குள், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் கல்வியாண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித் தோ்வா்கள்; முதல்முறையாக, அனைத்து பாடங்களையும் எழுதுவோா்; ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டுக்கு முன் பழைய பாடத் திட்டத்தில் தோ்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவா்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, பெயா்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

அனைத்து தனித் தோ்வா்களும் செவ்வாய்க்கிழமை முதல் நவ.25-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT