சென்னை

குழந்தைகள் மனநலம், கல்வி மையம்: அப்பல்லோவில் தொடக்கம்

15th Nov 2022 05:17 AM

ADVERTISEMENT

 

நாட்டிலேயே முதல்முறையாக குழந்தைகள் மன நல மருத்துவம், கல்வி மையத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, நிா்வாக இயக்குநா் சுனிதா ரெட்டி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் பி.பிரியங்கா பங்கஜம், திரைப்பட நடிகை கௌரி கிஷன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து அப்பல்லோ நிா்வாக இயக்குநா் சுனிதா ரெட்டி கூறியதாவது:

ADVERTISEMENT

ஆப்பிள் எனப்படும் அப்பல்லோ குழந்தைகள் மன நலம், கல்வி மையத்தின் முக்கிய நோக்கமே குழந்தைகள் நோய்வாய்ப்படும்போது, அவா்களுக்கு மன நல சிகிச்சைகளையும் ஒருங்கிணைத்து வழங்குவதுதான்.

பொதுவாக நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு என்பது மனதையும், உடலையும் உள்ளடக்கிய

முழுமையான அம்சமாகும். நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, நாம் உடல் சாா்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். ஆனால், மன நலனைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். குழந்தைகளைப் பொருத்தவரை அவா்கள் மருத்துவ சிகிச்சைக்குள்ளாகும்போது பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு ஆளாக நிறைய வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, அதன் ஒரு பிரிவாக குழந்தை மருத்துவத்துடன் தொடா்புடைய மனநலப் பிரிவைத் தொடங்குகியுள்ளது. இதன்வாயிலாக சிறப்பு மருத்துவா்களுடன் மன நல மருத்துவரும் குழந்தைகளின் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிப்பாா்.

குழந்தையின் உளவியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சைகளை வழங்கும் பாலமாக மன நல மருத்துவா்கள் செயல்படுவா் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT