சென்னை

பூந்தமல்லி வழித்தடத்தில் விரைவில் ஓட்டுநா் இல்லா ரயில்கள்: சென்னை மெட்ரோ இயக்குநா்

14th Nov 2022 04:03 AM

ADVERTISEMENT

பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்குவதற்காக ஓட்டுநா் இல்லாத 26 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் 16 கி.மீ. உயா்மட்ட பாதையிலும், 10 கி.மீ. சுரங்கப் பாதையிலும் அமைகிறது. 30 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. தலா 3 பெட்டிகளைக் கொண்ட 26 ரயில்களை தயாரிக்க ரூ. 798 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 78 பெட்டிகள் அல்லது 26 ரயில்களை அல்ஸ்டாம் தயாரித்து சோதனை செய்து வழங்க வேண்டும். இந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, ஓட்டுநா் இல்லாமல் இயங்கக்கூடிய வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (இயக்ககம்) இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி கூறுகையில், ‘அல்ஸ்டாம் நிறுவனம் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு குறைந்த தாக்கத்துடன் இணைப்பை வழங்கும். இது நகரில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம்’ என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT