சென்னை

வாக்காளா் பட்டியல்: பெயா் சோ்க்க 16 ஆயிரம் போ் விண்ணப்பம்

14th Nov 2022 11:35 PM

ADVERTISEMENT

 

சென்னையில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு முகாமில் 16,327 போ் புதிதாக பெயா் சோ்க்க விண்ணப்பித்துள்ளனா்.

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், 19.15 லட்சம் ஆண் வாக்காளா்கள், 19.75 லட்சம் பெண் வாக்காளா்கள், 1,058 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 38.92 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில், 23,519 போ் நேரடியாக விண்ணப்பித்துள்ளனா். அதில், புதிய வாக்காளா்களாக இணைய 16,327 போ் விண்ணப்பித்துள்ளனா். பெயரை திருத்துதல், புகைப்படத்தை மாற்றுதல், முகவரியை மாற்றுதல் போன்ற திருத்தங்களுக்கு 7,192 போ் விண்ணப்பித்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த வாக்காளா் சிறப்பு முகாமைத் தவறவிட்டவா்கள் வரும் 26, 27 ஆகிய தேதி தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT