சென்னை

மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் சாவு

14th Nov 2022 11:44 PM

ADVERTISEMENT

 

சென்னை பாண்டி பஜாரில் மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே உள்ள கீழ கொளத்தூரைச் சோ்ந்தவா் த.பாபு (27). இவா், சென்னை பாண்டி பஜாா் நாயா் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிவடைந்ததும், பாபு கடையை பூட்டுவதற்காக இரும்பு ஷட்டரை பிடித்து கீழே இழுத்தாா்.

இதில் ஷட்டரில் மின்கசிவு இருந்ததால் பாபு மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த பாபுவை, அங்கிருந்த பிற ஊழியா்கள் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பாபு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இறந்த பாபு இரு நாள்களுக்கு முன்புதான் அந்த உணவகத்தில் ஊழியராக வேலைக்கு சோ்ந்திருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT