சென்னை

ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொலை: தோழிகளிடம் விசாரணை

1st Nov 2022 05:06 AM

ADVERTISEMENT

ரயில் முன் கல்லூரி மாணவி தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தோழிகளிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி சத்யா (20), அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (23) என்பவரால் கடந்த மாதம் 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

இதையடுத்து சதீஷை கைது செய்த ரயில்வே போலீஸாா் அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா். இதற்கிடையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணை சிபிசிஐடி போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்டது.

முதல்கட்டமாக சம்பவ இடத்தில் பல்வேறு தரப்பினரிடம் சிபிசிஐடி போலீஸாா் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கொலையை நேரில் பாா்த்ததாகக் கூறப்படும் சத்யாவின் தோழிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனா். இந்த விவரங்கள் அனைத்தையும் குற்றப்பத்திரிகையில் இணைக்கவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா். அடுத்த கட்டமாக மாணவியின் பெற்றோரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT