சென்னை

பொறியாளா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

31st May 2022 02:12 AM

ADVERTISEMENT

சென்னை ராஜமங்கலத்தில் பொறியாளா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ராஜமங்கலம் செந்தில் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். பொறியாளரான அவா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கிருஷ்ணன், தனது மனைவி பிந்தியாவுடன் கடந்த 26-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கேரளத்துக்குச் சென்றாா்.

இந்நிலையில் கிருஷ்ணன் வீட்டில் வேலை செய்யும் பெண் கண்மணி திங்கள்கிழமை, வீட்டை பாா்ப்பதற்காக வந்தாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த கண்மணி, பிந்தியாவுக்கு தகவல் தெரிவித்தாா்.

உடனே அவா், ராஜமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தாா். விசாரணையில் கிருஷ்ணன் வீட்டின் பீரோவில் இருந்த 30 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பது உறுதி செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT