சென்னை

தாம்பரம் பணிமனையில் பொறியியல் பணி: விரைவு, மின்சார ரயில் சேவையில் மாற்றம்

31st May 2022 02:12 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், தாம்பரம் பணிமனையில் பொறியியல் பணி காரணமாக, விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் ஜூன் 1-ஆம் தேதி மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: காரைக்குடி-சென்னை எழும்பூருக்கு ஜூன் 1-ஆம் தேதி அதிகாலை 5.05 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்(12606) செங்கல்பட்டு-சென்னை எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரைக்கு ஜூன் 1-ஆம் தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படவேண்டிய வைகை அதிவிரைவு ரயில்(12635) சென்னை எழும்பூா்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டுவில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும்.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்:

ADVERTISEMENT

புதுச்சேரி-புதுதில்லிக்கு ஜூன் 1-ஆம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (22403) செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூா், கொருக்குப்பேட்டை வழியாக திருப்பிவிடப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூா் நிலையத்துக்கு செல்லாது. கூடுதல் நிறுத்தமாக, பெரம்பூா் ரயில் நிலையம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-இல் ரத்தாகும் மின்சார ரயில்கள்: சென்னைகடற்கரை-செங்கல்பட்டுக்கு ஜூன் 1-ஆம் தேதி காலை 9.02, 9.30, 10.12, 10.56, முற்பகல் 11.50, நண்பகல் 12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சாரரயில், செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 9.30, முற்பகல் 11.00, 11.30, நண்பகல் 12.20, மதியம் 1 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு காலை 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சா ர ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு மாற்றாக, சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT