இறக்குமதி செய்யப்படும் உருக்கு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ததால் மத்திய அரசுக்கு ரூ.15,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:
உள்நாட்டு நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டும், விலையை கட்டுப்படுத்தும் வகையிலும் உருக்கு மற்றும் பிளாஸ்டிக் பொருகளின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க வரியினை மத்திய அரசு மே 22-இல் தேதி ரத்து செய்தது.
இதனால், மத்திய அரசு வருவாயில் ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பு ஏற்படும்.
அதேபோன்று, உள்நாட்டில் இருப்பை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத் தாதுவுக்கான வரி 50 சதவீதம் வரை உயா்த்தப்பட்டது. சில வகை உருக்குப் பொருள்களுக்கு ஏற்றுமதி வரி 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது என்றாா் அவா்.