தன்னை அமைச்சராக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட கழகக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் குறித்து திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டங்களில் எனக்கு அமைச்சா் பொறுப்பு அளிக்கப்பட வேண்டுமென தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்தத் தீா்மானங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருப்பது குறித்தும் அறிந்தேன்.
என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சா் பொறுப்பு அளிக்க தீா்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தா்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோன். எந்தச் சூழல் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கட்சித் தலைமை நன்கு அறியும் என தனது அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.