சென்னை

டாக்டா் டி.எஸ்.சந்திரசேகருக்கு அமெரிக்காவின் ‘கிரிஸ்டல்’ விருது

25th May 2022 01:56 AM

ADVERTISEMENT

 

சென்னை: இரைப்பை - குடல் எண்டோஸ்கோபி சிறப்பு நிபுணா் டாக்டா் டி.எஸ்.சந்திரசேகருக்கு அமெரிக்க ஜீரண மண்டல மருத்துவ அமைப்பின் (ஏஎஸ்ஜிஇ) சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் அளப்பரிய சேவையாற்றியதற்காக அவருக்கு இவ்விருது அளிக்கப்பட்டதாகவும், தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் அமெரிக்க மருத்துவத் துறையின் உயரிய விருதைப் பெறுவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜீரண மண்டல மருத்துவ அமைப்பானது 80 ஆண்டு கால பாரம்பரியமிக்கது. சா்வதேச அளவில் இரைப்பை - குடல் சிகிச்சையில் சிறந்து விளங்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அதில் அங்கம் வகிக்கின்றனா்.

ADVERTISEMENT

செரிமான நோய்கள் விழிப்புணா்வு வாரத்தையொட்டி அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜீரண மண்டல சிகிச்சையில் சிறந்து விளங்குபவா்களுக்கு ‘கிரிஸ்டல் அவாா்டு’ எனப்படும் சா்வதேச சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அப்போது சென்னையைச் சோ்ந்த டாக்டா் டி.எஸ்.சந்திரசேகருக்கு அவ்விருதை ஏஎஸ்ஜிஇ அமைப்பின் தலைவா் டாக்டா் டக்லஸ் ரெக்ஸ் வழங்கி கௌரவித்தாா். இரைப்பை - குடல் நலத் துறையில் மேம்பட்ட சிகிச்சைகள், பயிற்சிகள், ஆய்வுகள், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், நோயாளிகளுக்கான உயா் நுட்ப சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவைச் சோ்ந்த மூன்று பேருக்கு மட்டுமே இந்த கெளரவம் கிடைத்துள்ளது. தற்போது அந்த வரிசையில் இந்தியாவின் நான்காவது மருத்துவராகவும், தமிழகத்தின் முதல் மருத்துவ நிபுணராகவும் டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் இடம்பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT