சென்னை

டாக்டர் டி.எஸ்.சந்திரசேகருக்கு அமெரிக்காவின் "கிரிஸ்டல்' விருது

25th May 2022 04:06 AM

ADVERTISEMENT

 

சென்னை: இரைப்பை } குடல் எண்டோஸ்கோபி சிறப்பு நிபுணர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகருக்கு அமெரிக்க ஜீரண மண்டல மருத்துவ அமைப்பின் (ஏஎஸ்ஜிஇ) சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் அளப்பரிய சேவையாற்றியதற்காக அவருக்கு இவ்விருது அளிக்கப்பட்டதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க மருத்துவத் துறையின் உயரிய விருதைப் பெறுவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜீரண மண்டல மருத்துவ அமைப்பானது 80 ஆண்டு கால பாரம்பரியமிக்கது. சர்வதேச அளவில் இரைப்பை } குடல் சிகிச்சையில் சிறந்து விளங்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
செரிமான நோய்கள் விழிப்புணர்வு வாரத்தையொட்டி அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜீரண மண்டல சிகிச்சையில் சிறந்து விளங்குபவர்களுக்கு "கிரிஸ்டல் அவார்டு' எனப்படும் சர்வதேச சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அப்போது சென்னையைச் சேர்ந்த டாக்டர் டி.எஸ்.சந்திரசேகருக்கு அவ்விருதை ஏஎஸ்ஜிஇ அமைப்பின் தலைவர் டாக்டர் டக்லஸ் ரெக்ஸ் வழங்கி கெüரவித்தார். இரைப்பை } குடல் நலத் துறையில் மேம்பட்ட சிகிச்சைகள், பயிற்சிகள், ஆய்வுகள், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், நோயாளிகளுக்கான உயர் நுட்ப சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு மட்டுமே இந்த கௌரவம் கிடைத்துள்ளது. தற்போது அந்த வரிசையில் இந்தியாவின் நான்காவது மருத்துவராகவும், தமிழகத்தின் முதல் மருத்துவ நிபுணராகவும் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் இடம்பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT