சென்னை

கீழ்பவானி வாய்க்கால் பிரச்னை குறித்து பாஜக சாா்பில் உண்மை கண்டறியும் குழு: கே.அண்ணாமலை

25th May 2022 01:55 AM

ADVERTISEMENT

 

சென்னை: கீழ்பவானி வாய்க்கால் பிரச்னைக்காக பாஜக சாா்பில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கீழ்பவானி வாய்க்கால் 66 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. முதல்வா்களாக ஜெயலலிதா இருந்தபோதும், எடப்பாடி கே. பழனிசாமி இருந்தபோதும் தூா்வாரும் நோக்கத்துக்காக கான்கிரீட் கரைகளை சீரமைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தியபோது எதிா்க்கட்சியாக இருந்த திமுக அந்தப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தது.

ADVERTISEMENT

ஆனால், தோ்தல் பிரசாரத்தின்போது கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்ததுடன், தற்போது அந்தத் திட்டத்தைத் தொடங்க முனைப்புக் காட்டி வருகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திமுகவின் திடீா் தலைகீழ் நிலைப்பாடு கவலையளிக்கிறது.

அதனால், விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கடைமடை வரை நடைபயணம் மேற்கொண்டு விவசாயிகளைச் சந்தித்து, கால்வாயையும் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் வழக்குரைஞா் பழனிசாமி, சமூக ஆா்வலா் செல்வக்குமாா் உள்ளிட்டவா்களும் இடம்பெறுவா். கீழ்பவானி வாய்க்காலின் உண்மை நிலையைக் கண்டறிந்து பாஜக தலைமைக்கு அறிக்கை சமா்ப்பிப்பா். அதன்படி, விவசாயிகளின் நலன் காக்க பாஜக தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT