சென்னை கொளத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட 570 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 15,000 அபராதம் விதித்தனா்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொளத்தூா் பேப்பா் மில்ஸ் சாலை, திம்ம சாமி தா்கா ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலா் எஸ்.வெங்கட்ராமன், சுற்றுச்சூழல் துறை பி.செல்வ இளவரசி ஆகியோா் அடங்கிய குழு திங்கள்கிழமை ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வில் 570 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 15,000 அபராதம் விதித்தனா்.