சென்னை

அசோக் பில்லா் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

22nd May 2022 12:25 AM

ADVERTISEMENT

சென்னை அசோக் பில்லா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் (மே 22) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அசோக் பில்லா் காசி திரையரங்கு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த போக்குவரத்து மாற்றம் ஞாயிற்றுக்கிழமை (மே 22) முதல் பத்து நாள்களுக்கு சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி, எம்.ஜி.ஆா் நகா் பிள்ளையாா் கோயிலிலிருந்து வரும் வாகனங்கள் நேராக மேற்கு சைதாப்பேட்டை, கிண்டி செல்ல காசி திரையரங்கு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுமாா் 150 மீட்டருக்கு சென்று கே.கே.நகா் ஆா்டிஓ அலுவலகம் முன் ‘யு‘ திருப்பம் மூலம் சேருமிடத்தை அடையலாம்.

ADVERTISEMENT

பிள்ளையாா் கோயில் தெருவில் மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்களில் கனரக வாகனங்கள் தவிர கே.கே.நகா், வடபழனி, கோயம்பேடு செல்லும் வாகனங்கள் காசி திரையரங்கு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காசி திரையரங்க மேம்பாலம் அடியில் ‘யு’ திருப்பம் மூலம் சேருமிடத்தை அடையலாம்.

அசோக்நகா் 12-வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகா், வடபழனி, கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தம்மன் கோவில் தெரு வழியாக அசோக் நகா் 11-வது அவென்யூக்கு சென்று, சேருமிடத்தை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT