சென்னை

அதிமுக ஆர்ப்பாட்டம்

20th May 2022 04:56 AM

ADVERTISEMENT

 

தாம்பரம்:  ஓராண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளை விரைந்து  நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சிட்லப்பாக்கத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:

சிட்லப்பாக்கம் ஏரியை மேம்படுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள்  துரிதமாக நடைபெற்றன. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

ADVERTISEMENT

தென் சென்னை முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,  பம்மல் பா.அப்பு வெங்கடேசன்,  என்.சி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT