சென்னை

விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

20th May 2022 04:55 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இசைக் கல்லூரி மாணவர் இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஸ் நாராயணன் மஸþர் (23). இவரது நண்பர் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த  வச்சு ஸ்ரீவத்ஸவ் (22). இவர்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான இசைக் கல்லூரியில் படித்து வந்தனர்.  இந்நிலையில் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை அதிகாலை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அவர்களது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து  நிமிஸþம், வச்சு ஸ்ரீ வத்ஸவும் பலத்தக் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

இதில்  நிமிஸ் நாராயண் மஸþர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வச்சு ஸ்ரீ வத்ஸவ் அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT