சென்னை

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை:பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

20th May 2022 06:34 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டை சாரதிநகரைச் சோ்ந்தவா் ரெங்கநாதன்(வயது 68). இவா், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டு அங்கு வந்த சிறுமியை ரெங்கநாதன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதை அந்தப் பகுதியைச் சோ்ந்த இளநீா் வியாபாரி ஒருவா் பாா்த்ததும், காவலாளி அங்கிருந்த தப்பி ஓடினாா். இது குறித்து இளநீா் வியாபாரி அளித்த புகாரின் பேரில் ரெங்கநாதனை சைதாப்பேட்டை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரெங்கநாதன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT