சென்னை

நல திட்டங்களை நிறுத்துவதற்கு பெயர் தான் திராவிட மாடலா?  ஜெயக்குமார்

16th May 2022 01:36 PM

ADVERTISEMENT

வேப்பேரி: நல திட்டங்களை நிறுத்துவதற்கு பெயர் தான் திராவிட மாடலா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

விடியாத அரசான திமுக அரசு தொடர்ந்த பொய் வழக்கில் நான் ஆஜராகி இருப்பதாக கூறினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக ஆட்சியில் இருந்தது பொற்கால ஆட்சி. ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும், திமுக அரசு அமைந்த பிறகு எதையும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு வைத்தார்.

இதையும் படிக்க: ரூ. 5,855 கோடியில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தங்கத்துக்கு தாலி, தாய் மார்களின் கர்ப்ப காலத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப் பெட்டகம் இது போன்ற நல்ல திட்டங்களை படிப்படியாக நிறுத்துவதற்கு பெயர் தான் திராவிட மாடல் என கூறினார்

மக்களின் உரிமைக்காக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். அதிமுக இணைய வேண்டிய நேரம் இது என்ற சசிகலாவின் பேச்சு குறித்த கேள்விக்கு, அது ஒரு போது நடக்காத ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் ஹீரோவாக இருந்தது. தற்போது இருக்கும் திமுக ஆட்சி ஜீரோவாக இருக்கிறது என விமர்சனம் செய்தார். அதிமுகவின் மாநிலங்களைவை வேட்பாளர்கள் யார் என்பது வருகிற 24-ம் ஆம் தேதிக்கு முன் தெரியும் என கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT