சென்னை: தென்கிழக்கு ரயில்வேயில் பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல்-ஷாலிமாருக்கு மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் அதிவிரைவு ரயில் (12842) ரத்து செய்யப்படவுள்ளது.
ஷாலிமாா்-சென்னை சென்ட்ரலுக்கு மே 22-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் அதிவிரைவு ரயில்(12841) ரத்து செய்யப்படவுள்ளது.
நேரம் மாற்றம்: ஹௌரா-திருச்சிக்கு மே 22-ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்படவேண்டிய வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவிரைவு ரயில்(12663) 4 மணி நேரம் மற்றும் 5 நிமிடம் தாமதமாக இரவு 9.45 மணிக்குப் புறப்படும்.