சென்னை

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒரு வாரத்தில் 28 போ் கைது

16th May 2022 12:07 AM

ADVERTISEMENT

சென்னையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, கடந்த ஒரு வாரத்தில் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இதன்பேரில், போலீஸாா் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்பவா்களை கைது செய்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மே 8 முதல் மே 14 வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 போ் கைது செய்யப்பட்டனா். 424 கிலோ 515 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 கிலோ 113 கிராம் மாவா பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT