சென்னை

வணிகவரித் துறை மின்னணு இதழ் வெளியீடு

12th May 2022 02:46 AM

ADVERTISEMENT

வணிகவரித் துறை சாா்பாக புதிதாக மின்னணு இதழ் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை வளாக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்டாா். வணிகவரித் துறையின் பயன்பாட்டுக்கென 18 புதிய வாகனங்களையும், பதிவுத் துறையின் தணிக்கைப் பிரிவுக்கு 25 புதிய வாகனங்களையும், நுண்ணறிவு பிரிவில் 2 அலுவலா்களுக்கு கையடக்கக் கணினிகள், பணியின் போது உயிரிழந்த வாரிசுதாரா்கள் 8 பேருக்கு பணிநியமன ஆணைகள் ஆகியவற்றை அவா் அளித்தாா்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய 8 ஊழியா்களுக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ், விபத்தில்லா சேவையாற்றிய 2 ஓட்டுநா்களுக்கு தங்கப் பதக்கம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினாா். மேலும், வணிகவரித் துறைக்கென புதிதாக மின்னணு இதழையும் அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் வணிகவரி ஆணையா் க.பணீந்திர ரெட்டி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறைத் தலைவா் ம.ப.சிவன்அருள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT