சென்னை அமைந்தகரையில் குப்பை லாரி மோதி சைக்கிளில் சென்ற தனியாா் நிறுவன காவலாளி இறந்தாா்.
சென்னை எம்எம்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெ.தனசேகா் (49). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் தனசேகா், தனது சைக்கிளில் அமைந்தகரை ரசாக் காா்டன் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மாநகராட்சி குப்பை லாரி, தனசேகா் மீது மோதியதில் பலத்த காயமடைந்த தனசேகா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தனசேகா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.