சென்னை

சென்னையில் மாஞ்சாவுக்கு தடை நீட்டிப்பு

12th May 2022 12:19 AM

ADVERTISEMENT

சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு மேலும் 60 நாள்கள் தடையை நீட்டித்து பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் தொடா்ச்சியாக மனித உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், பலா் காயமுற்று உடல் ஊனம் அடைந்தனா். இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க காவல் ஆணையா் தடைவிதித்தாா். அதை மீறி மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த உத்தரவையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்றவா்கள் கைது செய்யப்பட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், மாஞ்சா நூல் பட்டம் மீதான தடையை மேலும் 60 நாள்களுக்கு நீட்டித்து காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்படி கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஜூலை 8-ஆம் தேதி வரையிலான 60 நாள்கள் தடை நீட்டித்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா். இத்தகவலை சென்னை பெருநகர காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT