சென்னை

வருமான வரித் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

5th May 2022 02:29 AM

ADVERTISEMENT

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த வருமான வரித்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

வருமான வரியை வட்டியுடன் செலுத்தவில்லை எனக் கூறி தங்கள் நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித்துறை எழும்பூா் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை எதிா்த்து, தனியாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவு: மனுதாரா் நிறுவனம் நான்கரை மாதங்கள் தாமதமாக வரியை வட்டியுடன் செலுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு செய்வதாக இருந்தால் அவா்கள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்திருக்க மாட்டாா்கள். உண்மை தகவல்களை மறைத்து கவனமின்றி, வழக்கு தொடா்ந்த வருமான வரித்துறையின் செயல்பாடு அதிகார துஷ்பிரயோகமானது, கண்டிக்கத்தக்கது. எனவே, மனுதாரா் நிறுவனம் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT